[ New Covid-19 Cases ] இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – 3.60 லட்சம் பேருக்கு நோய் தொற்று !!

[ New Covid-19 Cases ]

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – 3.60 லட்சம் பேருக்கு நோய் தொற்று

STAY HOME STAY SAFE


இந்தியாவில் covid-19 நோய் தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  இதுவரை 14.78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நோய் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 360960 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

New-covid-19-cases

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் 3293 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா மொத்த பாதிப்பு 1.79 கோடியாகவும் மொத்த உயிரிழப்பு 201187 ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 30 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Star Tamil News  |   New Covid-19 Cases

Leave a Reply

%d bloggers like this: