மியான்மர் ராணுவம் தாக்குதல்- 18 போராட்டக்காரர்கள் பலி!!

மியான்மர் ராணுவம் தாக்குதல் 18 போராட்டக்காரர்கள் பலி

மியான்மரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் அங்சாங் சுகியிண் கட்சி பெரும்பான்மையான இடத்தை கைப்பற்றி வெற்றி பெற்றது ஆனால் இந்த வெற்றியை ஏற்க ராணுவம் மறுத்துவிட்டது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கடந்த மாதம் ராணுவ ஆட்சியைை பிரகடனப்படுத்தி ஆளும் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி அந்நாட்டின்  அதிபர் மற்றும் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்களை வீட்டு சிறையில் வைத்தது ராணுவம்

மியான்மர்

இதை எதிர்த்து தலைநகர் யங்கூன் மற்றும் முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்தது போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது ராணுவத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு 20 ஆண்டு சிறை  தண்டனை வழங்கப்படும் என  அறிவித்தது மியான்மர் ராணுவத்தின் இச்செயலை ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அமெரிக்க போன்ற உலக நாடுகள் கண்டித்து வந்தன

இந்நிலையில் நேற்று இராணுவ அடக்குமுறைகளை கண்டித்து தலைநகர் யங்கூனில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தின்போது ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது இதைதொடர்ந்து போராட்டக்காரர்களின் நோக்கி ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்  18 பேர் பலியானதாகவும் 30க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது

Leave a Reply

%d bloggers like this: