14 வயது சிறுவன் உட்பட 38 பேரை சுட்டுக் கொன்றது மியான்மர் ராணுவம்!!

14 வயது சிறுவன் உட்பட 38 பேரை சுட்டுக் கொன்றது மியான்மர் ராணுவம்.
myanmar protest

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சாங் சுகியின் கட்சி வெற்றி பெற்றது இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தேர்தல் முடிவினை ஏற்க மறுத்து வந்தது மியான்மர் ராணுவம் இந்நிலையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி ஆளும் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்தது மியான்மர் ராணுவம்.

இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியாகியுள்ளனர் இந்நிலையில் தற்போது ஐநா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதனன்று மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுவன் உட்பட 38 பேர் இறந்ததாகவும் இது ரத்தக்கரை படிந்த நாள் எனவும் அந்த கோர சம்பவத்தை பற்றி தெரிவித்துள்ளது.

மியான்மர்-ராணுவம்

Myanmar Army

மேலும் தலைநகர் ரங்கூன்  உள்ளிட்ட நகரங்களில் மியான்மரில் ராணுவ ஆட்சியை திரும்பப்பெற வேண்டும் எனவும் சிறையில் அடைத்துள்ள தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் மீது எந்தவித முன்னெச்சரிக்கையும் விடுக்காமல் தடியடி, கண்ணீர் புகை குண்டு போன்ற கூட்டத்தை கலைக்கும் எந்த முறையையும் ராணுவம் கையாளாமல் நேரடியாக துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்த பின்னரும் மியான்மர் ராணுவம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை மாறாக பொது மக்களின் போராட்டங்களை ராணுவ நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தி ஒடுக்கவே முயற்சிக்கின்றது நிராயுதபாணியாக உள்ள போராட்டக்காரர்கள் மீது முன்னறிவிப்பு இன்றி துப்பாக்கிச்சூடு நடத்துவது ராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை என மிரட்டுவது போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது விரைவில் மியான்மர் ராணுவம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Leave a Reply

%d bloggers like this: