[ Myanmar ] சீன நிறுவனங்களுக்கு தீவைப்பு | மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு !!- 01

[ Myanmar Protest ] சீன நிறுவனங்களுக்கு தீவைப்பு | மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு !!-01

நமது அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் ஓராண்டு காலம் ராணுவ ஆட்சி அமல்படுத்தபடுவதாக ராணுவம் அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அந்நாட்டு முக்கிய தலைவர்கள் ராணுவத்தால்  சிறை வைக்கப்பட்டனர்.

இதைக் கண்டித்து மியான்மரின் முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன போராட்டங்களை  ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது துப்பாக்கிச்சூட்டில் இதுவரை குழந்தைகள் பெண்கள் என மொத்தம் 138 பேர் பலியாகியுள்ளதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.

மியான்மர்

Myanmar Protest

சீன நிறுவனங்கள் மீதான தாக்குதல்

இந்தியா உட்பட உலக நாடுகளின் கண்டனங்களுக்கு செவிசாய்க்காத மியான்மர் ராணுவம் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது இந்நிலையில் மியான்மார் ராணுவத்திற்கு சீனா தொடர்ந்து ஆதரவு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன நிறுவனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தீ வைப்பு போன்ற தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

இதனால் கோபமடைந்த சீன தூதரகம் போராட்டக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மியான்மர் இராணுவத்தை கேட்டுக்கொண்டது இதன் பின்னர் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

%d bloggers like this: