மியான்மர் ராணுவத்திடம் தப்பி இந்தியா வந்த மியான்மர் போலீசார்-02

மியான்மர் ராணுவத்திடம் தப்பி இந்தியா வந்த மியான்மர் போலீசார்.
Myanmar police

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சியை தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது இதனை ஒடுக்க மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 55 பேர் வரை பலியாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் பிடியில் இருந்து தப்பிய மியான்மர் போலீசார் 19 பேர் இந்திய எல்லைக்குள் அடைக்கலம் தேடி நுழைந்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரம் லங்காவு எனும் கிராமத்தில் வைத்து மிசோரம் போலீஸாரிடம் இவர்கள் சிக்கியுள்ளனர்.

மியான்மர்போலீசார்

Myanmar-protest

இந்தியா வந்துள்ள மியான்மர் போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது முதல்கட்ட விசாரணையில் மியான்மர் ராணுவம் தங்களை போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அப்பாவி மக்கள் மீது கடுமையான போக்கை கையால தாங்கள் விரும்பாததால் ராணுவம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் செயல்படுத்தவில்லை இதனால் உச்சகட்ட கோபமடைந்த மியான்மர் ராணுவம் எங்களைத் தீவிரமாக தேடி வருகிறது இதனால் உயிருக்கு பயந்து அவர்களிடம் இருந்து தப்பிக்க இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

%d bloggers like this: