[ Prince Philip ] இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு – பிரதமர் மோடி இரங்கல் !!- 02

[ Prince Philip ]

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்


கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆண்ட்ரூவின் மகனான பிலிப் கடந்த 1947ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி அப்போதைய இங்கிலாந்து நாட்டின் இளவரசி எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து அரசு குடும்பத்தில் நீண்ட காலம் இளவரசராக சேவையாற்றிய இரண்டாம் எலிசபெத் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் நேற்று காலமானார்.

Prince-Philip

வரும் ஜூன் 10ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளை கொண்டாட இருந்த இளவரசர் பிலிப் கடந்த பிப்ரவரி மாதம் இதயநோயால் பாதிக்கப்பட்டு கிங் எட்வர்ட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 வாரம் சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் 16 ஆம் தேதி அரண்மனைக்கு திரும்பிய நிலையில் அவர் மரணம் அடைந்திருப்பது இங்கிலாந்து மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பல உலக தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டர் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் இளவரசர் பிலிப் பல சமூக சேவைகளை தானே முன்னின்று ஆற்றியுள்ளார் மேலும் ராணுவத்திலும் மிகச் சிறப்பாக பணியாற்றிய எடின்பர்கின் கோமகன் இளவரசர் பிலிப் மறைவால் வேதனைப்படும் இங்கிலாந்து மக்கள் மற்றும் அரச குடும்பத்தினருடன் நானும் இணைகிறேன் எனவும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.


Star Tamil News                                                              Prince Philip

Leave a Reply

%d bloggers like this: