[ Jallikattu ] மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன்- ஓபிஎஸ் !! -03

[ Jallikattu ]

மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன்- ஓபிஎஸ் !!


ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில மற்றும் தேசிய தலைவர்கள் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் இன்று தமிழகம் வருகை புரிந்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jallikattu

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில் பிரதமர் மோடியின் வருகையால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது எனவும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனவும் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டு தடைக்கு மூல காரணமாக திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு நான் முதல்வராக இருந்தபோது எனது கோரிக்கையை ஏற்று ஒரே நாளில் நான்கு துறைகளில் அனுமதிபெற்று காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி உத்தரவிட்டு ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் எனவே உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் நரேந்திர மோடி அவர்கள் தான் என தெரிவித்தார்.


Star Tamil News                                                   Jallikattu

Leave a Reply

%d bloggers like this: