[ Modi ] மோடி வருகை – மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்- உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மதுரை நகரம்!! – 02

[ Modi ]

மோடி வருகை – மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்- உச்சகட்ட பாதுகாப்பில் மதுரை நகரம்!!


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

அந்தவகையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்தார்.

Modi

இதை தொடர்ந்து நாளை ஏப்ரல் 2ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்காக இன்று இரவு கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் விமான நிலையத்திலிருந்து நேராக மதுரை மீனாட்சி அம்மன் கோவில்    சென்று சுவாமி தரிசனம் முடித்துவிட்டு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறார்

நாளை காலை 10.30 மணிக்கு மதுரை சுற்றுவட்டார சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பிரச்சார பொதுக் கூட்ட மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் பிரதமரின் மதுரை வருகையையொட்டி சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை நகரம் கொண்டுவரப்பட்டுள்ளது.


Star Tamil News                                   Modi 

Leave a Reply

%d bloggers like this: