[ MK Stalin ] முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !! -01

[ MK Stalin ]

முதல்வர் முக.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள்

Star Tamil News 


தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இன்று தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ( Mk Stalin ) அவர்களுக்கு இதுவரை சாதாரண போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இனி எந்த வகையான பாதுகாப்புகள் முதல்வருக்கு வழங்கப்படும் என்பது குறித்த ஒரு பார்வை.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு மத்திய அரசின் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. முதலமைச்சர்கள் உட்பட முக்கிய விஐபிகளுக்கு பாதுகாப்பு தர NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கிய வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டும் NSG படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

Mk-stalin

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் முன்னாள் திமுக தலைவரும் முதல்வருமான மறைந்த கருணாநிதிக்கும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதை தவிர SSG எனப்படும் பிரத்தியேக பாதுகாப்பு படை பிரிவு ஒன்றை மாநில அளவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியிருந்தார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் ஜம்மு-காஷ்மீர்கான பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் ஐபிஎஸ் இதற்கு தலைமையேற்று வடிவமைத்தார். இந்த SSG பாதுகாப்பு படை பிரிவு முழுக்க முழுக்க முதலமைச்சருக்கான பாதுகாப்புக்காக, போலீஸில் மிக சிறப்பாக செயல்பஆட்டத்வர்களை வைத்து உருவாக்கப்பட்டது.

இந்த பிரத்தியேக படைபிரிவுக்கு பயிற்சி அளிக்க பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (BSF ) அதிகாரி மகேந்திரன் என்பவர் வரவழைக்கப்பட்டு தமிழக ஐபிஎஸ் கேடராக மாற்றப்பட்டார். அவரின் தலைமையின் கீழ் SSG படைப்பிரிவு 700 சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்களை கொண்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா உருவாக்கிய SSG படையின் எண்ணிக்கையை கருணாநிதி முதல்வரான பின்னர் 140 என்கிற அளவுக்கு குறைத்தார். மேலும் இப்படை பிரிவிற்கு கோர்செல் என பெயர் மாற்றமும் செய்தார்.

அதன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோர்செல் எண்ணிக்கையை உயர்த்தினார். கோர்செல் என்பது முழுக்க முழுக்க முதல் அமைச்சருக்கான பிரத்தியேக பாதுகாப்பாகும். ஆனால் ஜெயலலிதா மரணமடையும் வரை அவருக்கு இசட் பிளஸ் கேட்டகிரி பாதுகாப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுதவிர இரண்டாம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சில விஐபிக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் சுப்பிரமணியன் சாமி, முக.ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் இந்த மூன்று நபர்களுக்கு மட்டும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் சுப்ரமணியன் சுவாமி தவிர மற்றவர்களுக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

மேலும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கோர்செல் பிரிவு வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். கோர்செல் தனிப்பிரிவு என்பது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு இதில் ஒரு ஏடிஎஸ்பி மூன்று டிஎஸ்பிக்கள் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 ஷிப்டுகளும் இயங்கும் வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சஃபாரி உடையுடன் இயங்குவார்கள்.

இவர்கள் தான் முதலமைச்சரின் மெய்க்காவலர்களாக உடன் செல்வார்கள். முதலமைச்சரின் கான்வாயை இவர்கள் பொறுப்பேற்று செல்வார்கள். முதல்வரின் இல்லம், அலுவலகம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதலமைச்சருடன் இருந்தும் நிகழ்ச்சி நடைபெறும் முன்னரே பாதுகாப்பு குறித்து கண்காணித்து அனுமதி அளிப்பது நிகழ்ச்சி நடைபெறும் சமயம் அங்கு சுற்றுப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இதற்காகவே ஒரு கேம்ப் ஆபீஸ் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இயங்கும்.

Also Read : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு

Mk Stalin

தற்போது மு.க.ஸ்டாலின் ( MK Stalin ) முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு கோர்செல் எனப்படும் பாதுகாப்பு வழங்கப்படும். இதை தவிர செக்யூரிட்டி சென்னை போலீஸ் என்கிற சிறப்பு பிரிவு ஒன்றும் உள்ளது. இந்தபிரிவும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு சோதனை மோப்ப நாய் சோதனை ஜாமர்கள் கருவிகளை அமைப்பது உட்பட பல பணிகளை தலைமை செயலகம் முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பாதுகாப்பை மேற்கொள்வார்கள்.

மேலும் சென்னை மாநகர போலீஸ் பாதுகாப்பு படை மற்றும் ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும். இவர்கள் முதலமைச்சர் செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக வழங்குவார்கள். இதுதவிர முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சுற்றி பாரிகார்டு அமைத்து பாதுகாப்பதும் இவர்களின் பணியே.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதை அடுத்து அவருக்கு வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பை தாண்டி முதல்வர் கான்வாய் எனப்படும் குண்டுத்துளைக்காத தமிழக அரசின் முத்திரை பொறுத்திய கார் மற்றும் விஐபி எஸ்கார்டு என மூன்று பிரிவினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

Also Read : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று தேர்வு

Star Tamil News   |   MK STALIN

Leave a Reply

%d bloggers like this: