[ Amit Shah ] அமித்ஷாவை காணவில்லை போலீசில் புகார் !! -02

[ Amit Shah ]
அமித்ஷாவை காணவில்லை போலீசில் புகார்


இந்தியா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் 2வது அலை மிக தீவிரமடைந்து வருகிறது. நோய் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசு தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

Amit-shah

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை காணவில்லை என டெல்லியில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் கரியப்பா என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார் இவர் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆவார் இந்த புகாரை இணையம் வழியாக டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் மக்களை பாதுகாக்க அரசாங்கம் தேவைப்படும் இந்த சூழலில் அதில் மிகவும் முக்கிய பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்புகளை மறந்து காணாமல் போய்விட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மாறாக சவாலான சூழ்நிலைகளில் ஓடக்கூடாது. நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளது. மக்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலில் அதற்கு பதில் சொல்லும் பொறுப்பு இந்திய அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் செயலாளர் லோகேஷ் கூறுகையில் 2013ம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு பொறுப்பேற்று கொண்டிருந்தனர். ஆனால், 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் அனைத்தும் மாறிவிட்டன. தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் இரண்டாவது இடத்தில் உள்ள அமைச்சர் அமித்ஷா காணவில்லை என தெரிவித்தார்.

Also Read : 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை – அமெரிக்கா !!


Star Tamil News  |   Amit Shah

Leave a Reply

%d bloggers like this: