மார்ச்-5 திரைக்கு வரும் ‘ மிருகா ‘ திரைப்படம் !!!

மார்ச்5 திரைக்கு வரும் ‘மிருகா’ திரைப்படம் .

நடிகர் ஸ்ரீகாந்த் நடிகை ராய் லட்சுமி  நடிப்பில் உருவான மிருகா திரைப்படம் வரும் மார்ச் 5 வெள்ளி கிழமை அன்று திரைக்கு வரவிருக்கிறது இதற்கான பிரமோஷன் வேளைகளில் படகுழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது  .

மிருகா

 

பார்த்திபன் இயக்கத்தில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம் நீண்ட காலம் சரியான படங்கள் அமையாத நடிகர் ஸ்ரீகாந்த்க்கு நல்ல திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கு ஏற்றவாறு கடந்தாண்டு வெளியான மிருகா படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது இதனால் படத்தின் மீதான எதிர்பார்பும் அதிகரித்துள்ளது.

கொரானா காரணமாக நீண்ட நாட்கள் முடங்கியிருந்த திரையரங்களுக்கு மாஸ்டர் படம் நல்ல கலெக்சன் கொடுத்தது அதன் பின் சொல்லி கொள்ளும்படி எந்த திரைபடமும் வசூலை கொடுக்கவில்லை.

இந்நிலையில் கோத்தகிரி மலைபகுதிகளில் புலிகள் நடமாட்டம் மற்றும் அதன் அட்டகாசத்தால் ஏற்பட்டும் பாதிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என திரையரங்கு உரிமையாளர்கள கருதுகின்றனர்

Leave a Reply

%d bloggers like this: