[ Mettur Dam ] மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு !! -02

[ Mettur Dam ]

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு


கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1440 கன அடியிலிருந்து 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 97.69 அடியாகவும். மொத்த நீர் இருப்பு 61.88 டிஎம்சி ஆகவும் உள்ளது.

Mettur-dam

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 800 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. மேலும் காவிரியின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர தொடங்கியுள்ளது.


Star Tamil News   |     Mettur Dam

Leave a Reply

%d bloggers like this: