[ Mecca ] மெக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்ள 3 விதிமுறைகளை அறிவித்துள்ளது சவுதி அரேபிய அரசு !!-1

[ Mecca ]

மெக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்ள 3 விதிமுறைகளை அறிவித்துள்ளது சவுதி அரேபிய அரசு


முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது ” ஹஜ் புனித யாத்திரை ”  ஆண்டுதோறும் மக்கா நகருக்கு மேற்கொள்ளப்படும் இந்த புனித யாத்திரையை ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும்.

புனித ரமலான் மாதம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்க உள்ளதையோட்டி . இந்த ஆண்டு covid-19 நோய் தொற்றுக்கு மத்தியில் மெக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் நபர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது சவுதி அரேபியா அரசு.

இதுகுறித்து ஹாஜி மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சவுதி அரேபியாவில் இதுவரை 393000 நபர்கள் covid-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 6700 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சவுதி கடுமையாக போராடி வருகிறது.

Mecca

தற்போது புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளதை அடுத்து புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகிறது அதன்படி

1.ஒரு நபர் இரண்டு டோன்ஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்
2. அல்லது முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்டு 14 நாட்கள் கடந்து இருக்க வேண்டும்
3. ஏற்கனவே நோய் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும்.

இந்த மூன்று விதிகளில் ஏதாவது ஒரு விதி பொருந்தும் நபருக்கு மட்டுமே புனித மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


Star Tamil News                                                    Mecca

Leave a Reply

%d bloggers like this: