[ MDMK ] 15 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை என்ட்ரி – உற்சாகத்தில் மதிமுக தொண்டர்கள் !!

[ MDMK ]

15 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை என்ட்ரி – உற்சாகத்தில் மதிமுக தொண்டர்கள்


தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுகவுக்கு பல்லடம், மதுராந்தகம், மதுரை (தெற்கு), அரியலூர், வாசுதேவநல்லூர், சாத்தூர் ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது திமுக. இதில் சாத்தூர் தொகுதியில் டாக்டர் . ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், மதுரை தெற்கில் எம்.பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார், அரியலூரில் கே.சின்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் 4 பேர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக சார்பாக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளனர். மேலும் இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக ( MDMK ) இடம்பெற்ற கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதில்லை என்ற அவதூறு பேச்சுகளை இத்தேர்தல் மூலம் தகர்த்துள்ளது. மேலும் மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி வாகை சூடியுள்ளது.

MDMK

இதற்கு முன்பு கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைந்த மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பாக மதிமுக 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இனி அவ்வளவுதான் மதிமுக மூழ்கும் கப்பல் என அடுக்கடுக்கான விமர்சனங்கள் மதிமுக மீது வைக்கப்பட்டன இதனால் பல ஆண்டுகளாக சோர்வடைந்து இருந்த மதிமுக தொண்டர்களுக்கு தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News     |    MDMK

Leave a Reply

%d bloggers like this: