மாஸ்டர் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் : வைரல் வீடியோ

மாஸ்டர் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இந்திய கிரிகெட் அணி வீரர்கள்.

அகமதாபாத் :

இந்தியாவில் சுற்றுபயனம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் டி20 மற்றம் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.

Pink ball test match

மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் வரும் 24 தேதி முதல் 28ம் தேதி வரை இரவு பகல்  போட்டியாக பிங்க் நிற பந்தை கொண்டு நடக்க உள்ளது இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த போட்டியில் பங்கேற்க இந்திய இங்கிலாந்து வீரர்கள் கடந்த வாரம் சென்னையில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் சென்றனர்.

அகமதாபாத் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் பயிற்சியின் இடையே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் இனைந்து இந்திய அணி வீரர்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் பட பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல்லாகி வருகிறது.

Leave a Reply

%d bloggers like this: