மார்ச் மாத ராசி பலன்!!!

மார்ச் மாத ராசி பலன் 

 

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசி அதிபதி செவ்வாயை குரு பார்ப்பதால் இம்மாதம் சிறப்பான மாதமாக இருக்கும் கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும் பணவரவு சீராக இருக்கும் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்கநிலை மாறும் புது வாகனங்கள் மற்றும் வீடு கட்டும் யோகம் கைகூடும் வாழ்வில் முன்னேற்றத்திற்கான படியாக இம்மாதம் அமையும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் இணக்கமாக நடந்து கொள்வார்கள் சுபச்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 4ஆம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் புதிய முயற்சிகள் வீண் விவாதங்கள் எதிலும் சற்று கவனமாக இருப்பது நலம்

 

ரிஷபம்

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களின் நீண்ட நாட்கள் கண்ட கனவுகள்  கைகூடும் அற்புதமான மாதமாக இந்த மார்ச் மாதம் இருக்கும் மாதப் பிற்பகுதியில் அதிக நன்மைகளை அடைவீர்கள் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் அமர்வதால் உங்களுக்கு சிறப்பான நன்மைகள் ஏற்பட உள்ளது இளைஞர்களுக்கு திருமண யோகம் வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும் சிலருக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும் தொழிலதிபர்களுக்கு எதிரிகளின் இடையூறு இன்றி தொழில் சீராக இருக்கும் புதிய முதலீடுகளை செய்வீர்கள் கணவன் மனைவியிடையே சுமூகமான நிலை ஏற்படும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 6ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் புதிய முயற்சிகள் வீண் விவாதங்கள் இதில் சற்று கவனமுடன் இருப்பது நலம்

 

மிதுனம்

மிதுனம்

மிதுனராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் நிறை குறைகள் கலந்த மாதமாகவே இருக்கும் ராசி அதிபதி புதன் மற்றும் சனி சாதகமற்ற நிலையில் இருப்பதால்  எதிலும் குழப்பமான சூழ்நிலையே ஏற்படும் ஆனால் மாத இறுதியில் சுக்கிரனின் அனுகிரகத்தால் நற்பலன்கள் கிடைக்கப்பெறும் மாத முற்பகுதியில் வீண் அலைச்சல் கடன் தொல்லை பணவரவு இன்மை உங்களை ஆட்கொள்ளும் வேலைதேடும் இளைஞர்களுக்கு சரியான இடத்தில் வேலை அமையாது தொழில்துறையினர் மாத முற்பகுதியில் சற்று கவனமுடன் இருப்பது நலம் கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதம் தவிர்க்கப்பட வேண்டும் மாத பிற்பகுதியில் சுக்கிரனின் அனுகிரகத்தால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சனியின் பார்வையால் இந்த மாதம் முற்பகுதி சாதகமற்ற சூழ்நிலையும் பிற்பகுதி சாதகமான சூழ்நிலை  இருக்கும் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் குடும்ப உறுப்பினர்களை பிரிந்திருக்க வேண்டியதிருக்கும் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அடுத்தவர்கள் தட்டி செல்லும் நிலை ஏற்படும் கவலை கொள்ள வேண்டாம்  மாத பிற்பகுதியில் தொழில் வியாபாரம் சிறப்பானதாக இருக்கும் பொருளாதாரச் சிக்கல் நீங்கும் விரைவில் குரு பகவானால் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 11 முதல் 13 வரை சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூரப் பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்  இருக்கும் உங்கள் ராசிநாதன் சூரியன் மற்றும் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பது உங்கள் வாழ்வில் மேன்மையே ஏற்படுத்தும் மேலும் சுக்கிரனும் சாதகமான சூழ்நிலையில் உள்ளதால் உங்கள் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும் தடைப்பட்ட காரியங்கள் இப்போது எளிதாக முடியும் முயற்சிகள் அதிக பலன் தரும் குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும் திருமணத் தடை நீங்கும் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 13-ம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாகவே இருக்கும் புதன் சுக்கிரன் சனி போன்ற கிரகங்கள் நன்மை தரக்கூடிய இடங்களில் இருப்பதால் உங்கள் முயற்சிகள் கைகூடும் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் ஆன்மீக யாத்திரை செல்ல மனதில் எண்ணம் தோன்றும் வியாபாரம் விருத்தி அடையும் திருமணம் தடை நீங்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருளாதார வசதி மேம்படும் அரசியலில் எதிர்பாராத வளர்ச்சி ஏற்படும் மொத்தத்தில் மார்ச் மாதம் அதிர்ஷ்டமான மாதமாகவே கன்னி ராசிக்காரர்களுக்கு அமையும்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 16 முதல் 18 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் யோகமான மாதமாக அமையும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் கடன் தொல்லை நீங்கும் நீண்ட நாள் முயற்சிக்கு தகுந்த பலன் தற்போது கிடைக்கப் பெறுவீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் கணவன் மனைவியிடையே பாசம் அதிகரிக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும் வேலை பார்க்கும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் தொழிலில் இருந்த தேக்க நிலை மாறி தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 18ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் பெரிய நன்மைகளும் தீமைகளும் இல்லாத சமமான மாதமாக இருக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் பார்வையால் உங்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும் தொழிலில் இருந்து வந்த குழப்பம் நீங்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் வேலைதேடும் இளைஞர்களுக்கு கூடியவிரைவில் தகுதியான வேலை அமையும் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் நபர்களுக்கு எதிர்பார்த்த நன்மை கிடைக்கப்பெறுவார்கள் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் தொழில் போட்டிகளை எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள் வீட்டில் சுபகாரியம் நடக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை

 

சந்திராஷ்டமம்

 மார்ச் 21ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிகம் தடைகளை சந்திக்கும் மதமாக மார்ச் மாதம் இருக்கும் உங்கள் ராசிநாதன் குரு வலுவிழந்து இருப்பதனால் உங்களுக்கான நன்மைகள் தடைபடுகின்றன

மாத பிற்பகுதியில்  தொழில் முன்னேற்றம் பணப்புழக்கம் அதிகரிப்பு வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்க நன்மைகளை கிடைக்கப்பெறுவீர்கள் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் வெளிநாட்டு தொடர்புகளால் பண வரவும் உண்டாகும் கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது நன்மை பயக்கும் பிள்ளைகள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் இன்னும் சிறிது காலத்தில் இந்த தடைகளை எல்லாம் நீங்கி நற்பலன்கள் பெறபோகிறீர்கள்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 23ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மார்ச் மாதம் உங்கள் முயற்சிகள்  கைகூடாத நிலையே இருக்கும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என எதிலும் தீர்மானமாக செயல்பட முடியாத காலமாக இந்த மாதம் இருக்கும் விரைவில் அதிசாரம் பெறப்போகும் குருவால் நன்மைகள் நடக்க இருக்கின்றன சற்று பொறுமை காக்கவும் ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் சற்று கவனம் தேவை பணம் கொடுக்கல்-வாங்கலில் அதிக கவனம் தேவை மற்றும் கடன் வாங்கி  செலவழிக்கும் சூழ்நிலை ஏற்படும் யாருக்கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்டாம் பெண்கள் விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நன்மைபயக்கும் மாத பிற்பகுதியில் நன்மைகள் உண்டாகும் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது சனிக்கிழமை பயணங்கள் மேற்கொள்வதை முடிந்தவரை தவிர்ப்பது நலம்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 25ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

 

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் இன்பத் துன்பங்கள் கலந்த விரையச் சனி காலம் என்பதால் பண வரவும் அதற்கேற்ற செலவும் ஆகும் மாத முற்பகுதியில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும்.

வெளிநாடு வெளி மாநில தொடர்புகள் சாதகமற்ற நிலையை உண்டாக்கும் ஏற்றுமதி துறையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் செயல்படுவது பின்னாளில் நன்மைபயக்கும். மற்றபடி பெரிய கெடுதல்கள் எதுவும் கும்ப ராசிக்காரர்களுக்கு உண்டாகாது மாத பிற்பகுதியில் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் மனம் ஆன்மிக விஷயத்தை நாடும் அலுவலகங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும் நண்பர்கள் உதவுவார்கள் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 28ஆம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்

 

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் தங்களின் முயற்சிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக இருக்கும் எதிலும் விடா முயற்சியாக செய்யும் செயலில் வெற்றியைக் காண்பீர்கள் உங்கள் ராசி அதிபதி குரு நல்ல நிலையில் இருப்பதினால் சில நல்ல பலன்களையே பெறுவீர்கள் ஆனால் ராகுவின் சாதகமற்ற நிலையால் சில தடைகள் ஏற்படும் இருந்தாலும் உங்கள் அதீத முயற்சியினால் தடைகளை தகர்த்து எதிலும் வெற்றி காண்பீர்கள் சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்ய வாய்ப்பு அமையும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை உங்கள் முயற்சியினால் சரி செய்வீர்கள் கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும் வீட்டுக்கு தேவையாதை செய்வீர்கள் மனதில் புது உற்சாகம் பிறக்கும் இன்முகத்துடன் காணப்படுவீர்கள் பணவரவுகள் அதிகரிக்கும் கடந்த காலப் பிரச்சனைகள் தீரும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும் வேலைதேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும் குடும்பத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்

 

சந்திராஷ்டமம்

 

மார்ச் 2-ஆம் தேதி முதல் 4ம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணங்கள் பணம் கொடுக்கல் வாங்கல் வீண் விவாதம் போன்றவற்றை தவிர்ப்பது நலம்

Leave a Reply

%d bloggers like this: