[ Maoist Attack ] பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் 5 பேர் பலி 10 பேரை காணவில்லை !!

[ Maoist Attack ] பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் 5 பேர் பலி 10 பேரை காணவில்லை


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 5 பேர் உயிர் இழந்துள்ளனர் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சத்தீஷ்கர் மாநிலம் பிஜாபூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் கோப்ரா யூனிட்டை சேர்ந்த வீரர்கள் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது திடீரென பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.

Maoist-Attack

இந்தத் தாக்குதல் குறித்து நக்சல் எதிர்ப்பு படையின் ஐஜி ஓ.பி.பால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 30 க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயங்களுடன் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 10 பாதுகாப்பு படை வீரர்கள் காணவில்லை எனவும். உயிரிழந்த 5 பாதுகாப்பு படை வீரர்களில் இரண்டு பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Star Tamil News                        Maoist Attack

Leave a Reply

%d bloggers like this: