03-அதிரடியாக அரசியல் கட்சி தொடங்கினார் அரசியல்  சாணக்கியர்- மன்சூர் அலிகான் !!!

அதிரடியாக அரசியல் கட்சி தொடங்கினார் அரசியல்  சாணக்கியர்- மன்சூர் அலிகான் !!!

சென்னை :-

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி சொந்தமாக புதுகட்சி தொடங்கயுள்ளார்.

வினோதமாகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் வில்லங்கமாகவும் எதையாவது பேசி மக்களின் கவனத்தை ஈர்க்கும் மன்சூர் அலிகானுக்கு அவரின் செயல்பாட்டினை மெச்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் நடிகர், இயக்குனர் மற்றும் அரசியவாதியுமான திரு.சீமான்.

Mansoor-Ali-khan

பிரச்சாரத்தின் போது செருப்பு தைத்து ஓட்டு கேட்டார் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து ஓட்டு கேட்டார் இப்படி வினோதமாக எதையாவது செய்து ஊடகங்களில் அதிக கவனம் பெற்றார். சீரியசாக பேசும் சீமானின் பேச்சு கூட இவரின் செய்கையால் சிரிப்பு பிரச்சாரமாக மாறிவிடும் இதனாலேயே கடந்த சில மாதங்களாகவே இவரை கட்சியின் தலைமை ஒதுக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுள்ளார் அதை சீமான் மறுத்து விட்டதாக தெரிகிறது .

இதை தொடர்ந்து  தானே கட்சி தொடங்கினால் யாரிடமும் சீட்டுக்காக கையேந்த வேண்டிய அவசியம் இல்லை என ஆழ்ந்த சிந்தனைக்கு பின் ” தமிழ் தேசிய புலிகள் ” என்ற கட்சியை தொடங்கி விட்டார் கட்சியின் கொள்கை, தலைவர் மன்சூர் அலிகானில் தேர்தல் சுற்றுபயணம் , கட்சியின் முதல் எழுச்சி மாநாடு  மற்றும் மாநில , மாவட்ட ,நகர ,ஒன்றிய , பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில்  நிர்வாகிகள் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

” நாம் தமிழர் கட்சி தம்பிகள் மைண்ட் வாய்ஸ் – ஒருவழியா நாம  எஸ்கேப் ஆகிட்டோம் மக்கா ”

 

Leave a Reply

%d bloggers like this: