[ Manmohan Singh ] மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது – மத்திய அமைச்சர் தகவல் !! -01

[ Manmohan Singh ]

மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது – மத்திய அமைச்சர் தகவல்


கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

Manmohan-Singh-மன்மோகன்-சிங்

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் 2 லட்சத்தையும் தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரிடம் தான் கேட்டறிந்ததாகவும் தரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Star Tamil News     |    Manmohan Singh

Leave a Reply

%d bloggers like this: