[ Mamata ] கொரோனாவுக்கு பலியான மம்தா பானர்ஜியின் சகோதரர் !! -01

[ Mamata ]

கொரோனாவுக்கு பலியான மம்தா பானர்ஜியின் சகோதரர்


மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி (வயது 60) கொரோனா நோய் தொற்றால் இன்று உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 136 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி நாளை தினம் முதல் மே 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த முழு ஊரடங்கு சமயத்தில் தனியார் வாகனங்கள், அரசு பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோ, புறநகர் ரயில்கள் என அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mamata

Also Read : இந்தியாவின் நிலையை கண்டு பரிதாபப்படும் உலக சுகாதார அமைப்பு !!

இந்தசூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பேனர்ஜி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் ஆஷிம் பானர்ஜி உயிரிழந்தார். இதுகுறித்து மெடிக்கா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் அலோக் ராய் கூறுகையில்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அஷிம் பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். இந்த தகவலை முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தெரிவித்து விட்டோம் எனக் குறிப்பிட்டார்.

Also Read : இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் !!


Star Tamil News  |  Mamata

Leave a Reply

%d bloggers like this: