[ Mamata Banerjee ] மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம் !!

[ Mamata Banerjee ]

மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.


மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது இதில் முதல் நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 45 சட்டசபை தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என மாற்றிக் கொள்ளுங்கள் என தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மம்தா பானர்ஜியின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனுவை விசாரித்த இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Mamata-banerjee

அதன்படி ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி எந்த ஒரு வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தடை குறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தேர்தல் ஆணையத்தின் இந்த ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஏப்ரல் 13ஆம் தேதி ( இன்று) பகல் 12 மணி முதல் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.


Star Tamil News                     Mamata Banerjee

Leave a Reply

%d bloggers like this: