[ Makkal Needhi Maiam ] நடிகர் நாசரின் மனைவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் !! -02

[ Makkal Needhi Maiam ]

நடிகர் நாசரின் மனைவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார்


மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டு வந்த பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கியதிலிருந்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Makkal-needhi-maiam

கமீலா நாசரின் ராஜினாமா குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் வெளியிட்ட அறிக்கையில் நமது கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


Star Tamil News   | Makkal Needhi Maiam

Leave a Reply

%d bloggers like this: