[ Maharashtra ]100 கோடி ரூபாய் மாமூல் கேட்ட மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா !!

[ Maharashtra ]

100 கோடி ரூபாய் மாமூல் கேட்ட மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா


மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான அணில் தேஷ்முக் தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதிய கடிதத்தில் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் போலீசாரின் இடமாறுதல் மற்றும் நட்சத்திர விடுதியில் 50 முதல் 60 கோடி வரை என மொத்தம் 100 கோடி ரூபாய் மாதம்தோறும் மாமூல் வசூலித்து தரவேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கடிதம் எழுதியிருந்தார்.

Maharashtra

இந்த கடிதம் மகாராஷ்டிரா அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா ஆளுனரை சந்தித்து உள்துறை அமைச்சரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தது.

இதைதொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் உள்துறை அமைச்சர் மீது வழக்கு தொடுத்தார் இன்று இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது மேலும் 5 நாட்களுக்குள் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பி உள்ளார்.


Star Tamil News                                           Maharashtra

Leave a Reply

%d bloggers like this: