[ Lockdown ] நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் ராகுல் காந்தி கோரிக்கை !! -07

[ Lockdown ]

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் ராகுல் காந்தி கோரிக்கை


இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் மேல் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 2.02 கோடி பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேல் இருந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது

கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது ஒன்றே தீர்வாகும்.

Lockdown

மேலும் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து விட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் தான் கொரோனாவுக்கு பலர் பலியாகி வருகிறார்கள் என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.


Star Tamil News   |    Lockdown

Leave a Reply

%d bloggers like this: