[ Lockdown ] தேர்தலுக்கு பின் லாக்டவுன் அரசு தீவிர ஆலோசனை !! -01

[ Lockdown ]

கொரோனா பரவல் அதிகரிப்பு தேர்தலுக்கு பின் ஊரடங்கு – அரசு தீவிர ஆலோசனை !!

Star Tamil News

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில் எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத் துறையினருடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் தினசரி பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

சுமார் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் , பள்ளிகள் திறப்பு போன்ற காரணங்களால் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Lockdown

மகாராஷ்டிரா குஜராத் பஞ்சாப் போன்ற மாநிலங்களை போன்று இரவு நேர ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக சென்னை, கோவை உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளில் வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சி அரசியல் கூட்டங்கள் திருமணம் பொது போக்குவரத்து திரையரங்கு சமூக நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது அதேபோன்று சில கட்டுப்பாடுகளை தற்போது விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


Star Tamil News                             lockdown 

Leave a Reply

%d bloggers like this: