03-வரவிருக்கிறது செயற்கை மரம் –  காடுகள் அழிப்புக்கு மாற்றுவழி !!

வரவிருக்கிறது செயற்கை மரம் –  காடுகள் அழிப்புக்கு மாற்றுவழி !! – lab grown wood

மனிதன் தன் தேவைக்காகவும் வர்தக நோக்கத்திலும் பல காலமாக அதிகளவில் மரங்களை வெட்டியதன் விளைவால் புவி வெப்பநிலை அதிகரிப்பு பருவநிலை மாற்றம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை இந்த உலகம் எதிர்நோக்கி உள்ளது.

இதனால் காடுகளை பாதுக்காக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியாவும் தன் பங்கிற்கு காடுகள் பரப்பளவை அதிகரிக்க மக்களிடம் மரம் வளர்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுத்த தீவிரம் காட்டி வருகிறது இதன் பலனாக இந்தியாவில் 2017ல் 21.57 சதவிகிதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது 24.50 சதவிகிதமாக உயர்ந்ததுள்ளது இருந்தாலும் வர்த்தக நோக்கம் போன்ற பல காரணத்தால் மரங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதை ஈடுகட்டுவது அரசுக்கு பெரும் சவால் நிறைந்ததாக உள்ளது.

செயற்கை-மரம்

Lab Grown wood

இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக விரைவில் வர இருக்கிறது செயற்கை மரம். சமீபத்தில் உயிர் பலி இல்லாமல் கோழி இறைச்சியை ஆய்வகத்தில்  செயற்கையாக உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது . இதே போன்ற ஒரு முயற்சியில் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களின் நோக்கம் தேவைக்கு ஏற்ப மர பலகைகள் மர துண்டுகளை ஓரிரு  மாதங்களில் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்குவது இதற்கான முயற்சியில் குறிப்பிடதக்க அளவில் வெற்றியும் பெற்றுள்ளனர் .

இந்த ஆய்வு குறித்து ஆய்வின் தலைமை விஞ்ஞானி ஆஸ்லி தெரிவிக்கையில்  மனித தேவை, உட்கட்டமைப்பு , பயோ-எரிபொருள் போன்ற தேவைக்காக மரங்கள் அதிகளவில் அழிக்கபட்டு வருகின்றன இதற்கு தீர்வு காணும் விதமாக தங்கள் ஆய்வகத்தில் 3டி பிரிண்டட் ஜெல்லில் தாவரங்களின் செல்களை செலுத்தி ஓரிரு மாதங்களில் தேவையான வடிவத்தில் மர துண்டுகளை உருவாக்கி வருவதாகவும் இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளதாகவும் விரைவில் இந்த தொழில்நுட்பம் மூலம் நமது மர தேவை பூர்த்தி செய்யபடும் என  தெரிவித்தார்.

 

 

Leave a Reply

%d bloggers like this: