Kidnapped : சித்தப்பாவை கடத்தி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது !!

[ Kidnapped ]

சித்தப்பாவை கடத்தி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முன்விரோதம் காரணமாக சொந்த சித்தப்பாவை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி பணம் பறிக்க முயன்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்து தலைமறைவான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தியாகதுருகம் என்னும் பகுதியில் வசித்து வரும் முகமத் ரியாசுதீன் என்பவருக்கும் அவரது உடன்பிறந்த அண்ணன் மகன் நஸ்ருதீனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கடந்த 6மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

தனது சித்தப்பா கேட்ட பணத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நஸ்ருதீன் அவரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து நசுருதீன் ஏற்பாட்டின் படி கடந்த மே 1ஆம் தேதி ரிஸ்வானா என்கிற பெண் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ரியாசுதினுக்கு சொந்தமான 6 சென்ட் காலி வீட்டு மனையை தான் வாங்க விரும்புவதாகவும் அதற்காக மனையை பார்க்க நேரில் வருமாறு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிக கடன் நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த ரியாசுதீன் அந்தப்பெண்ணின் பேச்சை நம்பி நேரில் சென்றுள்ளார்.

அங்கு வீட்டு மனையை பார்வையிட்ட அந்த பெண் தனக்கு இந்த மனை மிகவும் பிடித்துவிட்டது தனது கணவர் அருகிலுள்ள ஊரில் ஒரு வேலையாக இருக்கிறார் நீங்கள் என்னுடன் காரில் வந்தால் அவரிடம் பேசி உடனடியாக அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என சாமர்த்தியமாக பேசியுள்ளார்.

Kidnapped

Kidnapped

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!

அந்த பெண்ணின் பேச்சை நம்பிய ரியாசுதீன் காரில் ஏறியுள்ளார். கார் சிறிது தொலைவு சென்றவுடன் ரிஸ்வானா டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஏற்கனவே அந்த கும்பல் திட்டமிட்டபடி அங்கு நின்றிருந்த 3 பேர் காரில் ஏறி முகமது ரியாசுதீனை சரமாரியாக தாக்கியும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டியும் நாங்கள் உன்னை கடத்தியுள்ளோம்  ( Kidnapped )  10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரியாசுதீன் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை தான் ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன் என கூறியதும் அவர்கள் ரியாசுதினின் சட்டை பையில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணம், கைப்பேசி மற்றும் ATM அட்டையை பறித்து கொண்டு . ரியாசுதீன் செல்போனில் உள்ள Phone Pay செயலி மூலம் அவர் வங்கி கணக்கிலிருந்த இரண்டு லட்சம் ரூபாயை தங்களது வாங்கி கணக்கிற்கு மாற்றிக் கொண்டதோடு அடுத்த 4 நாட்களுக்குள் மேலும் 2 லட்சம் ரூபாயை கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பேக்கரிக்கு வந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என மிரட்டி காரிலிருந்து அவரை கீழே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத முகமது ரியாசுதீன் கடத்தல்காரர்கள் கூறியபடி கடந்த 4ஆம் தேதியன்று 2 லட்சம் ரூபாய் பணத்துடன் அவர்கள் கூறிய பேக்கரிக்கு சென்றுள்ளார். ஆனால் கடத்தல்காரர்கள் பணத்தை நேரில் வாங்க மறுத்து அருகில் உள்ள இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட அந்த இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்துவிட்டு அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து கொண்ட முகமது ரியாசுதீன் அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் விலாசத்தை பற்றி விசாரித்த போது அது தனது அண்ணன் மகன் நஸ்ரூதினுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது உடனடியாக இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர் நஸ்ரூதின் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 லட்ச ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து பின்னர் தலைமறைவான ரிஸ்வானா என்கிற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!


Star Tamil News  |  Kidnapped | Kallakurichi Kidnapped

Leave a Reply

%d bloggers like this: