2021-கேரளா சட்டமன்ற தேர்தல் –  ஆட்சியை பிடிக்க போகும் கட்சி எது ?

கேரளா சட்டமன்ற தேர்தல் –  ஆட்சியை பிடிக்க போகும் கட்சி எது ?

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதியை நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது .

அதன்படி மொத்தம் 140 தொகுதிகள் கொண்ட கேரளா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கபட்டது.

Kerala-election-survey

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19ஐ கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் தாக்கம் 2021 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடும் என கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருத்துகனிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான பெரும்பாலான கருத்துகனிப்பு முடிவுகள் படி தற்போது ஆளும் இடது முன்னனியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கின்றன.

2019 தேர்தலில் சபரிமலை விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்துக்கள் மத விவகாரத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகப்படியான  வெறுப்பை காட்டியதே தேர்தல் தோல்விக்கு காரணம் என கூறபட்டது அதை தொடர்ந்து கடந்த வருடம் தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியது இதற்கு மத்தியிலும் இடது முன்னணி கருத்து கணிப்புகளில் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசின் இந்த சரிவுக்கு பாஜக தான் முக்கிய காரணமாக இருக்கலாம் என கருத்து நிலவுகிறது பாஜக மெல்ல மெல்ல தனது வாக்கு வங்கியை கேரளாவில் உயர்த்தி வருகிறது  இம்முறை பாஜக 20 சதவீத வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அடுத்தடுத்த படையெடுப்பு காசரகோட்டில் உத்திரப்பிரதேச முதல்வர் நடத்திய விஜயா யாத்திரை மற்றும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜகவில் இனைந்தது போன்ற விவகாரம் அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது அடுத்த 5 வருடங்களில் கேரளாவில் பிஜேபி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது .

ஆனால் தற்போதைய கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக 3ம் இடம்பெறும் என தெரிகிறது.

கருத்துகணிப்பு முடிவுகள்

மொத்தம் 140 தொகுதிகள்
கம்யூ +   =   72
காங்+.    =   61
பிஜேபி+=  07

 

 

 

 

 

 

Leave a Reply

%d bloggers like this: