[ Kashmir Encounter ] ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம் !!

[ Kashmir Encounter ]

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கனிகாம் என்கிற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காஷ்மீர் மாநில காவல் துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

Kashmir-encounter

Also Read : பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குகுதல் நடத்தியதால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் தீவிரவாதிகளிடம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

ஆனால் தீவிரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நான்கு தீவிரவாதிகளில் தவுசிப் அகமது என்னும் ஒரு நபர் சரணடைந்தார். உயிரிழந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பகுதியை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

Star Tamil News    |  Kashmir Encounter

Leave a Reply

%d bloggers like this: