[ Kanimozhi ] என் அண்ணன் அழகிரியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன் கனிமொழி !!-01

[ Kanimozhi ]

என் அண்ணன் அழகிரியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன் கனிமொழி !!

Star Tamil News

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தலைவர்களின் தீவிர பிரச்சாரத்தால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது இந்நிலையில் நேற்றைய தினம் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகனை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தீவிர பிரச்சாரத்திற்கு இடையே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கனிமொழி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தமிழகத்தில் பாஜக ஒன்றும் பெரிய கட்சி இல்லை ஆனால் ஆளும் அதிமுக அரசை கட்டுப்படுத்தி தனது பினாமியாக செயல்பட வைக்கிறது . ஜெயலலிதாவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு அதிகம் உள்ளது ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை அந்தக் கட்சியை யாரும் கட்டுப்படுத்தி இயக்கவில்லை ஆனால் இன்று டெல்லியிலிருந்து அதிமுக இயக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Kanimozhi

மேலும் செய்தியாளரின் மற்றொரு கேள்விக்கு கனிமொழி பதில் அளிக்கையில் முக.அழகிரி தற்போது கட்சியிலேயே இல்லை அவர் அமைதியாக இருக்கிறார் எனவே ஸ்டாலின் முதல்வராக முடியாது என அவர் கூறும் கருத்துக்கு பதில் அளிக்கவேண்டிய தேவையில்லை. அவர் என் அண்ணன் அவர் விருப்பினால் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசுவேன் அரசியல் வேறு குடும்பம் வேறு அவர் எப்போதும் என் அண்ணன் தான் என தெரிவித்தார்.


Star Tamil News                             Kanimozhi  

Leave a Reply

%d bloggers like this: