[ Kamal Tweet ] டீ கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் – கமல் விமர்சனம் !! -05

     [  Kamal Tweet  ]   டீ கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் கமல் விமர்சனம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் சாலையோர டீ கடையை அடித்து நொறுக்கிய போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் விமர்சித்துள்ளார்.

ஓமலூரில் இரவு 10 மணிக்கு மேல் சாலையோர டி கடை ஒன்று திறந்து இருந்ததை கண்ட அவ்வழியே சென்றார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் டீ கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Kamal

தற்போது இந்த தாக்குதல் குறித்து  நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ” ஓமலூர் அருகே இரவு 10 மணிக்கு மேல் டீக்கடையை திறந்திருந்ததால் அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் இதே காரணத்தை கூறி தான் சாத்தான்குளத்தில் ஜெயராஜயும், பெனிக்ஸையும் அடித்தே கொன்றார்கள் அதிமுக ஆட்சியில் காவல்துறை தனது கண்ணியத்தை இழந்து வருகிறது” என டுவிட்டரில் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: