எங்கள் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து விட்டது கழகம்- கமல்!!01

எங்கள் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து விட்டார்கள் கழகங்கள்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தலைவர்கள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருச்சி திமுக பொதுக்கூட்டம்

இதையொட்டி திருச்சியில் விடியலுக்கான முழக்கம் என்கிற தலைப்பில் திமுக சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தங்கள் கட்சி  செயல்படுத்த உள்ள பல திட்டங்களை வெளியிட்டு பேசினார்.

கமல்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயனடைவார்கள் எனவும் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் முறையை முற்றிலும் தடை செய்வது . 9.25 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது நகர்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு போன்ற பல திட்டங்களை அறிவித்திருந்தார்.

கமல் கருத்து

ஸ்டாலினின் இந்த அறிக்கை குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில் ‘கழகம் தங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களை பிரதி எடுத்து கொண்டன’ என ஸ்டாலினின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: