02-மு.க.ஸ்டாலினுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து 

02.-மு.க.ஸ்டாலினுக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதியான இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக தொண்டர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர் தேர்வு என பல பணிகளுக்கு மத்தியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு தனியாக நேரம் ஒதுக்கி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றுவருகிறார் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்டாலின் அவர்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இதையொட்டி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் டுவிட்டரில் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவது அரிது விழுதாக இருந்தால் கூடுதல் சுமை கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வரும் நண்பர் ஸ்டாலின் அவர்களை பிறந்தநாளில் வியந்து வாழ்த்துகிறேன் என கமல் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: