10ஆயிரம் ரூபாய்க்கு ஜியோ லேப்டாப்- விரைவில் அறிமுகமாகிறது

10ஆயிரம் ரூபாய்க்கு ஜியோ லேப்டாப்- விரைவில் அறிமுகமாகிறது

இந்தியாவில் குறைந்த விலையில் தொழில்நுட்பம் மற்றும் புதிய சேவைகளை மக்களுக்கு வழங்கி வரும் ஜியோ நிறுவனம்  இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ஜியோ நிறுவனத்தில் மேலும் ஒரு புதிய முயற்சியாக  குறைந்த விலையில் ஜியோ லேப்டாப்பை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஜியோ OS இயங்குதள கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த லேப்டாப் 10,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன மலிவான விலையில் அறிமுகமாகவுள்ள இந்த லேப்டாப் பயன்பாட்டாளர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ-லேப்டாப்

ஜியோ லேப்டாப் வசதிகள்

இந்த லேப்டாப் 4g LET snapdragon சப்போர்ட், 720 பிக்சல் HD திரை 2 ஜிபி ராம் 32 ஜிபி storage மற்றும் 4 ஜிபி ராம் 64 ஜிபி storage என இரண்டு வேரியண்ட்டில்  வெளிவர இருக்கும் இந்த லேப்டாப்பில் Mini HDMI Port , Dual Band Wi-Fi , Bluetooth , Qualcomm audio Chip, Microsoft office ,  Jio Page , Jio Meet , Jio Store போன்ற வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன நிறுவனம்

ஜியோ நிறுவனம் இந்த லேப்டாப்பை உருவாக்குவதற்கு சீனாவை சேர்ந்த ப்ளூ பேங்க் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

%d bloggers like this: