[ Jammu Kashmir ] ஜம்மு-காஷ்மீர் பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றது பாதுகாப்பு படை !!

[ Jammu Kashmir ]

ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றது பாதுகாப்பு படை


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை இன்று பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இன்று அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் முஹல்லா என்கிற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அவ்விடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

Jammu-kashmir

தொடர்ந்து சரணடைய மறுத்து வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர் இதில் 3 தீவிரவாதிகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 3 தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான தோட்டங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் இந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை எனவும் அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதல்கட்ட விசாரணையில் இந்த தீவிரவாதிகள் பாஜக நிர்வாகி அன்வர் அகமது வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


Star Tamil News                    Jammu Kashmir

Leave a Reply

%d bloggers like this: