நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம்-55 கோடி ரூபாய்க்கு விற்பனை!!

55  கோடி ரூபாய்க்கு விற்பனை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம்

பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் தனுஷ்  மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஓ டி டி தளமான நெட்பிளிக்ஸ் மூலம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இப்படத்தின் டீசரை கடந்த 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தின் டீசரை யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

Jagame-thandhiram

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பல மாதங்களுக்கு முன்பே வெளி வந்திருக்கவேண்டியது. ஆனால் கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது படக்குழுவினர் இத்திரைப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்த்திருந்த வேளையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை 55 கோடி ரூபாய்க்கு ஓ டி டி தளத்திற்கு  விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

%d bloggers like this: