IT Ride – அதிகாரிகளை குழப்பிவிட்ட துரைமுருகன் -01

(IT Ride) பணப்பட்டுவாடா வழக்கில் வருமானவரி துறையினரை கதறவிட்ட துரைமுருகன்

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பாக  திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார் .

அஅப்போது வேலூர் தொகுதியில்  பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரை அடுத்து மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர் இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து துரைமுருகன் மற்றும் அவரது மகன் எம்.பி கதிர் ஆனந்த் மீது வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

It-Ride

இந்த வழக்கில் தற்போது திமுக சார்பாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன அந்த மனுவில் வேலூரில் பணம் புகாரில் கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளர் டி துரைமுருகன் என்பவர் வேறு திமுக பொதுச் செயலாளர் மற்றும் எம்பி கதிர் ஆனந்த் தந்தை துரைமுருகன்  என்பவர் வேறு மற்றும் துரைமுருகன் திமுகவின் நிரந்தர பொருளாளரும் இல்லை என திமுக சார்பாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழப்பம்

இதனால் குழப்பமடைந்த வருமான வரித்துறையினர் இரண்டு துரைமுருகனும் ஒருவர்தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர் கடும் முயற்சிகளுக்குப் பின் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துரைமுருகன் பெயரில் கொடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பட்டா ஒன்றை ஆதாரமாக எடுத்து இரண்டு துரைமுருகனும் ஒருவர் தான் என நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது இந்த புதிய ஆதாரங்களை ஏற்க கூடாது என வாதிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

திமுக தரப்பு துரைமுருகனை திமுகவின் நிரந்தர பொருளாளர் இல்லை எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வழக்குத் தொடுக்கப்பட்ட காலத்தில் துரைமுருகன் திமுகவின் பொருளாளராக இருந்த காரணத்தால் இந்த வழக்கில் திமுகவையும் இணைக்கும் முயற்சியில் வருமான வரித்துறை ஈடுபடுவதாக கருதிய திமுக தரப்பு இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது என கருத்து நிலவுகிறது.

IT Ride

Leave a Reply

%d bloggers like this: