[ IT Raid ] மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – துரைமுருகன் விமர்சனம் !!-03

[ IT Raid ]

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை – துரைமுருகன் விமர்சனம்


திமுக தலைவர் மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான மேலும் 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முக்கிய புள்ளிகளின் இடங்களை குறிவைத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது முன்னதாக திருவண்ணாமலையில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது தமிழக அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த சோதனையில் பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் வருமானவரித்துறை சோதனையின் காரணமாக வீட்டிலுள்ளவர்கள் வெளி ஆட்களுடன் தொடர்பு கொள்ள அதிகாரிகள் தடை விதித்துள்ளனர் மேலும் சோதனையில் ஈடுபடும் இடங்களில் துணை ராணுவப் படை குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

IT-Raid

வருமானவரித்துறை சோதனை குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இந்த சோதனை பூச்சாண்டிக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது எனவும் அவ்வாறு திமுக அஞ்சுவதாக இருந்திருந்தால் இந்நேரம் கட்சியை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Star Tamil News                       DMK     IT Raid

Leave a Reply

%d bloggers like this: