[ Israel ] ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !! 01

[ Israel ]

ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர்


இஸ்ரேல் ( Israel ) ராணுவத்திற்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான மோதல்கள் நிகழ்ந்த வருகின்றது. இஸ்ரேலின் புனித ஜெருசலம் நகரில் உள்ள அல் அக்‌ஷா
வழிபாட்டு தளத்தில் பலஸ்தீனியர்கள் வழிபாடு செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ரீதியில் காசா முனையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல்  ( Israel )  மீது கடந்த செவ்வாய் கிழமை அன்று தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்றைய தினம் முழுவதும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

Israel

Also Read : தளபதி 65 படப்பிடிப்பை நடத்த வேண்டாம் விஜய் வேண்டுகோள் !!

இந்நிலையில் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகமான காசா டவர் என அழைக்கப்படும் 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக தாக்குதல் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஹமாஸ் இயக்கத்தினரின் காசா டவர் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் 130 ராக்கெட் ஏவுகணைகளை ஏவியது. இந்த ஏவுகணைகளில் 90 சதவீதமான ஏவுகணைகள் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டது.

இருந்தபோதிலும் ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் இன்னும் பிற நகரங்களில் விழுந்தன. இந்த தாக்குதலில் வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது 3 பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த மூன்று பெண்களில் கேரளாவைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்சகுஷி எனம் கிராமத்தை சேர்ந்த சௌமியா வயது 31 என்பது தெரியவந்துள்ளது. செவிலியரான இவர் இஸ்ரேலின் அஸ்கிலான் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஹமாஸ் குழுவினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு ஏவுகணை சௌமியா தங்கியிருந்த வீட்டின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர தாக்குதலில் சௌமியா பலத்த காயமடைந்தார். வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த அவரது கணவருக்கு சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சௌமியாவின் கணவர் அஸ்கிலான் நகரில் பணியாற்றி வந்த உறவினர் ஒருவரிடம் இதைப்பற்றி தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக சௌமியா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஏவுகணை தாக்குதலில் கட்டிடம் தரைமட்டமாகி சௌமியா உயிரிழந்ததை அவர் உறுதி செய்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளாக இஸ்ரேலில் ( Israel ) செவிலியராக பணியாற்றி வரும் சௌமியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் வந்து சென்ற சௌமியா வரும் ஜூலை மாதம் மீண்டும் சொந்த ஊரான கேரளா வர திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹமாஸ் தாக்குதலில் சௌமியா உயிரிழந்த சம்பவம் கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹமாஸ் தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Also Read : X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள் !!


Star Tamil News     |    Israel 

Leave a Reply

%d bloggers like this: