[ Israel ] இஸ்ரேல் நாட்டில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலி !!

[ Israel ]

இஸ்ரேல் நாட்டில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலி


இஸ்ரேல் நாட்டில் மதம் சம்பந்தமான திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் வடக்கில் உள்ள மவுண்ட் மெரான் என்கிற பகுதியில் விடுமுறை தினத்தையொட்டி மத வழிபாடு சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் .

Israel

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. மீட்புப்படையினர் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஜிவ் மற்றும் களிலீ என்னும் மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து இஸ்ரேல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கூட்டநெரிசலுக்காண காரணம் தெரியவில்லை. விடுமுறை நாளில் மத திருவிழாவில் கலந்து கொள்ள சென்றவர்களில் 44 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அந்நாட்டில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News  |  Israel

Leave a Reply

%d bloggers like this: