[ IPL ] 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடக்கம்

[ IPL ]

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடக்கம்


IPL Season 14

ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் இன்று சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருக்கின்றன.

கடந்தாண்டு நடைபெற்ற 13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா நோய்தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. கொரோனா நோய்தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தியாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை மும்பை, பெங்களூர், டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய 6 நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் மோத உள்ளது லீக் சுற்றில் டாப் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மே 30ஆம் தேதி நடைபெறு உள்ளது.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்த வருடம் எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடாத வகையில் போட்டி அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளது மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த சீசனிலும் ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ipl

IPL

வீரர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்த வீரர்காவது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அந்த வீரரை உடனடியாக தனிமைபடுத்தி உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளது மும்பை அணி தனது முதல் லிக் போட்டியில் தோல்வியடைவது தொடர்கதையாகிறது இந்த சறுக்கல்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடமாவது முடிவு கட்டுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இதுவரை பட்டம் வெல்லாத விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இந்த சீசனில் சாதிக்க முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா ( கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், ராகுல் சாஹர்,சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கீரன் பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர்-நிலே அல்லது ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா,டிரென்ட் பவுல்ட், இஷான் கிஷன் .

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

 

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ்,கைல் ஜாமிசன், நவ்தீப் சைனி,மேக்ஸ்வெல், முகமது அசாருதீன், டேனியல் கிறிஸ்டியன், முகமது சிராஜ்,வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் .


Star Tamil News                                                                            IPL

Leave a Reply

%d bloggers like this: