[ Submarine Missing ] 53 வீரர்களுடன் இந்தோனேஷியா நீர்மூழ்கிக் கப்பல் மாயம் !!

[ Submarine Missing ]

53 வீரர்களுடன் இந்தோனேஷியா நீர்மூழ்கிக் கப்பல் மாயம்


இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பயிற்சியின் போது 53 வீரர்களுடன் மாயமாகியுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே நேற்று அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான ” நங்கலா ” என்னும் நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த கப்பலில் 53 கடற்படை வீரர்கள் இருந்தனர்.

இந்நிலையில் பாலி தீவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் நீர்மூழ்கிக்கப்பல் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் பயணித்த 53 கடற்படை வீரர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

Submarine-missing

இதுதொடர்பாக இந்தோனேசியா நாட்டின் ராணுவ தளபதி வெளியிட்ட அறிவிப்பில் காணாமல்போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் போர் கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


Star Tamil News     |    Submarine Missing

Leave a Reply

%d bloggers like this: