[ Indonesia Submarine ] அடுத்த 15 மணி நேரத்திற்கு தான் ஆக்ஸிஜன் இருக்கும் – இந்தோனேஷியா நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரம் !!

[ Indonesia Submarine ]

அடுத்த 15 மணி நேரத்திற்கு தான் ஆக்ஸிஜன் இருக்கும் இந்தோனேஷியா நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரம் !!


53 வீரர்களுடன் காணாமல் போன இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பலில் அடுத்த 15 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டும்தான் இருப்பு இருக்கும் என்பதால் கப்பலை தேடும் பணியில் தீவிரபடுத்தபட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று வழக்கமான பயிற்சி மேற்கொண்டிருந்த இந்தோனேஷியா நீர்மூழ்கிக்கப்பல் ‘நாங்லா 402 ‘ பாலித் தீவு அருகே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் இந்தோனேசியா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஈடுபட்டு வருகிறது.

Indonesia-submarine

Indonesia Submarine 

கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ராட்சத பலூன்கள் மூலம் நீர்மூழ்கிக் கப்பலை கடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 15 மணி நேரத்திற்கு மட்டும் தான் கப்பலில் ஆக்ஸிஜன் இருப்பு இருக்கும் என்பதால் அதற்குள் கப்பலை மீட்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேஷியா கடற்படை வெளியிட்ட அறிவிப்பில் 1981ம் ஆண்டு கட்டப்பட்ட ‘நாங்லா 402 ‘ நீர்மூழ்கி கப்பல் 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவால் மேம்படுத்தப்பட்டு கப்பல் நல்ல நிலையில் தான் இருந்தது எனவும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது மின் கோளாறு காரணமாகவே கப்பல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும்.

சுமார் 1500 மீட்டர் ஆழம் கொண்ட பாலி தீவு கடற்பகுதியில் இந்த நீர்மூழ்கி கப்பல் அதிகபட்சம் 600 முதல் 700 மீட்டர் ஆழத்தில் மிதந்து கொண்டு இருந்தால் பெரிய அளவு சேதம் ஏற்படாது ஆனால் அதையும் கடந்து கூடுதலான ஆழத்திற்குச் சென்றால் அதீத அழுத்தத்தின் காரணமாக கப்பலுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு விடும் .

மேலும் விமானங்கள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கப்பல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்தின் அருகே கடற்பரப்பில் எண்ணெய் படலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் கப்பலில் இருந்த வீரர் ஒருவர் தனது மனைவிக்கு வீடியோ கால் மூலம் பேசியதாகவும் அதில் தாங்கள் இதுவரை மிதந்து கொண்டுதான் இருப்பதாகவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் என அவரது மனைவி தெரிவித்துள்ளதாக இந்தோனேசியா கடற்படை தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Star Tamil News  | Indonesia Submarine

Leave a Reply

%d bloggers like this: