[ Landslide ] இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 60 பேர் பலி

[ Landslide ]

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 60 பேர் பலி


இந்தோனேஷியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 12 பேரை காணவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவை அடுத்தடுத்து புயல்கள் தாக்கியதால் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அடோனாரா தீவு, திமோர் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீரில் அடித்து செல்லபட்டும் நிலசரிவில் சிக்கியும் பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளதால் மீட்புப்படையினர் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் நிலவி வருவதாக என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Landslide

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியில் அடோனரா தீவில் அமைந்துள்ள லோமுனலே என்னும் ஒரே கிராமத்தை சேர்ந்த 60 பேர் உயிரிழந்துள்ளது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் வரும் வெள்ளிக்கிழமை வரை கனமழை தொடரும் என இந்தோனேஷியா நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சபடுகிறது.


Star Tamil News             Indonesia Landslide

Leave a Reply

%d bloggers like this: