[ Stock Market ] கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு – ஊரடங்கு அச்சம் – பங்கு சந்தைகள் வீழ்ச்சி !!

[ Stock Market ]

கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு – ஊரடங்கு அச்சம் – பங்கு சந்தைகள் வீழ்ச்சி


இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நோய் தொற்றால் பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து பல மாநில அரசுகளும் நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்குடன் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரும் பட்சத்தில் முழு அளவிலான ஊரடங்கு அமல்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Stock-market

இந்நிலையில் covid-19 நோய் தொற்று  & ஊரடங்கு போன்றவற்றால் தொழில்துறைகள் பாதிக்கப்படும் என்கிறார் அச்சம்  இந்திய பங்குச்சந்தைகளில் கடும்  தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவது மற்றும் புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டாததாால் இன்று காலை தொடங்கிய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

தற்போது 12 மணி நிலவரப்படி தேசிய பங்கு சந்தை நிப்டி 504 புள்ளிகள் சரிந்து 14,330 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சுமார் 1684 புள்ளிகள் சரிந்து 47906 என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது. டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா பைனான்ஸ், டாட்டா பவர், பெல் போன்ற பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

 


Star Tamil News                                   Stock Market 

Leave a Reply

%d bloggers like this: