[ Seychelles ] செஷல்ஸ் நாட்டிற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோந்து கப்பலை பரிசாக வழங்கியது இந்தியா !!

[ Seychelles ]

செஷல்ஸ் நாட்டிற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோந்து கப்பலை பரிசாக வழங்கியது இந்தியா


இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு நோக்கங்களுக்காக இலங்கை, மாலத்தீவு, செஷல்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா கடல்சார் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு இந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அதன்படி 115 தீவுகளை கொண்ட செஷல்ஸ் நாட்டிற்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோந்து கப்பலை நேற்று இந்தியா பரிசாக அளித்துள்ளது. 48.9 மீட்டர் நீளமுடைய இந்த ரோந்துக் கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 35 நாட் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் பெற்றது. ரோந்து , போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்புப் நடவடிக்கைகளுக்காக இந்த கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது.

நேற்று ஒப்படைக்கப்பட்ட கப்பல் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் என்கிற நிறுவனத்தால் கட்டப்பட்டது. செஷல்ஸ் நாட்டின் கடற்படைக்கு இந்தியா பரிசாக கொடுக்கும் நான்காவது கப்பல் இது. ஏற்கனவே 2005ஆம் ஆண்டு PS Topaz, 2014ஆம் ஆண்டு PS Constant, 2016ஆம் ஆண்டு Patrol Boat Hermes போன்ற கப்பல்கள் இந்தியாவால் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

கடந்த மார்ச் 16-ம் தேதியே செஷல்ஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்ட இந்த ரோந்து கப்பல் நேற்று இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக செஷல்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

Seychelles

இந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் செஷல்ஸ் நாட்டின் அதிபர் ராம் கல்வான் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வந்த 1 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் திட்டம் மற்றும் நீதிமன்ற கட்டடம் போன்ற திட்டங்கள் நிறைவு பெற்று செஷல்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.


Star Tamil News                                          Seychelles

Leave a Reply

%d bloggers like this: