இந்தியா சீனா இடையே கடந்தாண்டு நடந்த கல்வான் மோதல் வீடியோவை வெளிட்டது சீனா

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்தாண்டு கல்வான் பகுதியில் நடந்த மோதல் வீடியோவை சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

India China

கடந்தாண்டு லடாக்கில் எல்லை கோடு பகுதியின் நோ மேன் ஜோன் ஏரியாவில் அத்துமீறி நுழைந்த சீன படைகளால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் எல்லையில் தனது படைகளை குவித்தது அதை தொடர்ந்து கல்வான் பகுதியில் மோதல் மூண்டது மோதலில் இந்திய தரப்பில் சுமார் 20 வீரர்கள் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ஆனால் சீனா வீரர்கள் உயிரிழப்புகள் பற்றி சீனா மவுனம் காத்து வந்தது ஆனால் சீனாவின் 41 வீரர்கள் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வந்தன களத்தில் இருந்த நமது வீரர்களும் நம்மை விட சீனாவுக்கே அதிக இழப்பு என தெரிவித்தனர் .

இதை தொடர்ந்து ராணுவ முக்கியதுவம் வாய்ந்த இடங்களை இந்திய ராணுவம் கைப்பற்ற தொடங்கியது லடாக்கில் இந்தியாவின் கை ஓங்கியது இதை சற்றம் எதிர்பாராத சீனா செய்வதறியாது திகைத்தது போர் ஏற்பட்டால் கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியதாகும் என உணர்ந்த சீனாவுக்கு பின்வாங்கினால் உலகளவில்  சீனாவுக்கு அவ பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால் தன் வாலை சுருட்டி கொண்டு பேச்சுவார்த்தையை ஜவ்வாக இழுத்து வந்தது. ஒரு வழியாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில நாட்களாக படைகளை பின்வாங்க தொடங்கியது.

இருப்பினும் சீனா ராணுவம் சீன மக்கள் மற்றம்  உலகளாவில் தன்னை மிகப்பெரிய சக்தியாக காட்டி கொள்ள இன்று வெளியிட்ட செய்தியில் கல்வான் மோதலில் இந்தியாவுக்கு தான் அதிக இழப்பு சீன தரப்பில் 4 பேர் தான் உயிரிழந்தனர் என சப்பை கட்டு கட்டி கல்வான் மோதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: