09-சத்தமில்லாமல் மீண்டும் படையை குவிக்கும் சீனா !!

சத்தமில்லாமல் மீண்டும் படையை குவிக்கும் சீனா
India China

கடந்த ஒரு வருட காலமாக நிலவிவந்த இந்தியா சீன ராணுவ வீரர்களின் எல்லை முற்றுகை பலகட்ட பேச்சுவார்த்தை பின் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது இதையடுத்து இரண்டு தரப்பு ராணுவங்களும் எல்லையிலிருந்து தங்கள் படைகளை பின் வாங்கிக் கொண்டனர்.

லடாக்கின் பாங்காங் சோ பகுதியில் இருந்து வெளியேறிய சீன ராணுவம் தற்போது சத்தமில்லாமல் தப்சாங் சமவெளிப் பகுதியில் தங்கள் படை பலத்தை அதிகரிக்க தொடங்கி உள்ளன.

சீனா

தப்சாங் சமவெளி

தப்சாங் பகுதி இந்தியா , சீனா ,பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் பகுதி என்பதாலும் சீனாவின் எக்கனாமிக் காரிடார் இந்தப் பகுதியின் வழியே செல்வதாலும் தப் சாங் சமவெளி வியூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது இங்கு தவுலத் பெக் ஒல்டி என்கிற பகுதியில் இந்தியாவின் விமான தளம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தவுலத் பெக் ஓல்டி பகுதியிலிருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  சீன ராணுவ முகாமில் படைகளை அதிகரிக்கும் வண்ணம் உள்கட்டமைப்பு வசதி , சுற்றுச்சுவர்  மற்றும் அதிகளவான வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய ராணுவ தரப்பில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் ராணுவத்திடம் உள்ளது எனவும் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: