07- ரிஷப் பண்ட் அசத்தல் சதம் – வலுவான நிலையில் இந்திய அணி !!

ரிஷப் பண்ட் அசத்தல் சதம் வலுவான நிலையில் இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம்

நேற்று முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் அந்த அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கில்  ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறினார் இதைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தாது .

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம்
ரிஷப்-பண்ட்

#indVSeng

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் வீரர்கள் புஜாரா 27, ரோகித் சர்மா 49, விராட்கோலி 0, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் கூட்டணி  அணியை சரிவில் இருந்து மீட்டனர் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி  118 பந்துகளை எதிர்கொண்டு 101 எடுத்திருந்த நிலையில் அண்டர்சன் பந்துவீச்சில்  விக்கெட்டை இழந்தார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு  294 ரன்கள் எடுத்திருந்தது வாஷிங்டன் சுந்தர்  60 ரன்களுடனும் அக்சர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை மூன்றாம் நாள் ஆட்டம்

தற்போது 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தில் மேலும் 100 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு கடுமையான நெருக்கடியில் ஏற்படுத்தலாம் மூன்றாம் நாளில் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: