Ind Vs Eng இந்திய சூழலில் சிக்கி சிதைந்த இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி இந்திய அணி-01

Ind Vs Eng இந்திய சூழலில் சிக்கி சிதைந்த இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி இந்திய அணி-01

ஆமதாபாத்தில் நடைபெற்றுவரும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது இன்று காலை தனது பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்சில்  365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட 160 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி.

Ind-vs-eng

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் பட்டேல் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர் அந்த அணியின் கேப்டன் ரூட்  அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்து அவுடானார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்  தற்போது வரை அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்து திணறி வருகிறது இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்கள் விக்கெட்டை இழந்ததால் இங்கிலாந்து அணி தோல்வியை எதிர்நோக்கிள்ளது இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் .

இப்போட்டியை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

%d bloggers like this: